Home » அரசியல் » யானைகள் நடமாட்டம்: கட்டுப்படுத்தப்படும் :திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

யானைகள் நடமாட்டம்: கட்டுப்படுத்தப்படும் :திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

சென்னை, ஜூன் 13தேனி மாவட்டத்தில் யானைகள் குடியிருப்பு பகுதிகளில் புகாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது எம்எல்ஏ ஜக்கையன் பேசுகையில், தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய பயிர்களை யானைகள் அடிக்கடி புகுந்து சேதப்படுத்தி மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது. 2 தினங்களுக்கு முன்பு தேவாரம் பகுதியில் புகுந்த யானை அங்கிருந்த விவசாயியை தாக்கியதால் உயிரிழந்துள்ளார்.

ஆகவே யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: உறுப்பினர் குறிப்பிட்டுள்ள பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு 4 லட்ச ரூபாய் நிவாரண நிதியை முதல்வர் அறிவித்து முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள தொகையை உரிய சான்றிதழ் செலுத்தி அந்த குழும உறுப்பினர்கள் பெற்று கொள்ளலாம். இதுபோன்று யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க சம்பந்தப்பட்ட பகுதிகளில் அகழிகள், மின்வேலிகள் அமைக்க வனத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் யானைகள் இனி ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*