Home » Flash News » கண்ணகி நகரில் அடிப்படை வசதிகள் : ஓ.பன்னீர்செல்வம்

கண்ணகி நகரில் அடிப்படை வசதிகள் : ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, ஜூன் 13:கண்ணகி நகர் பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் பேசுகையில், எங்கள் தொகுதிக்கு உட்பட்ட சோழிகநல்லூரில் கண்ணகி நகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு அடிப்படை வசதி என்பதே இல்லாமல் உள்ளது. தெரு விளக்குகள் கூட அங்கு சரியாக அமைக்கப்படுவதில்லை. அதே போன்று வழிபாட்டு தலங்களும் இல்லாமல் உள்ளது. குடிநீர் விநியோகம் என்பதும் 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை தான் வழங்கப்படுகிறது. இப்படி அடிப்படை வசதிகள் இல்லாமல் அந்த பகுதி மக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.

இதற்கு பதிலளித்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசுகையில், சென்னையில் குடிசையற்ற மாநகரை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்து அதன் அடிப்படையில் கரையோரம், சாலையோரம் வசிக்கும் மக்களை அந்த பகுதியில் இருந்து அகற்றி அவர்களுக்கு மாற்று வீடு வழங்குவதற்காக பெரும்பாக்கத்தில் 20 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட்டு 8 ஆயிரம் வீடுகள் இப்போது படிப்படியாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதற்காக நானே நேரில் சென்று பார்வையிட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன். அதே போன்று அந்த பகுதியில் பள்ளி கட்டிடமும் தற்போது கட்டப்பட்டு வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*