Home » Flash News » பாமக நிர்வாகி காருக்கு தீ வைப்பு

பாமக நிர்வாகி காருக்கு தீ வைப்பு

தூத்துக்குடி, ஜூன் 13:தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருப்பவர் சின்னதுரை. இவர் நேற்றிரவு டூவிபுரத்தில் உள்ள தனது கடையின் முன் காரை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

கொளுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அணைத்தனர். இதே போல் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியிலும் 2 மர்ம நபர்கள் கார்களுக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த தூத்துக்குடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். ஸ்டெர்லைட் போராட்டம் முடிவடைந்து அமைதி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கார்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*