Home » சினிமா » ராஜூமுருகனின் ஜிப்ஸி பர்ஸ்ட்லுக்

ராஜூமுருகனின் ஜிப்ஸி பர்ஸ்ட்லுக்

தேசிய விருது பெற்ற ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜூமுருகன் தற்போது இயக்க உள்ள படம் ஜிப்ஸி. இதில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மிஸ் இமாச்சல் பட்டம் வென்ற நடாஷா சிங் நடிக்கிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, செல்வகுமார் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்கார் தயாரிக்கிறார். சமூக கருத்துக்களை தன் படங்கள் மூலமாக
சொல்லும் இயக்குனர் ராஜூமுருகன் இந்த படத்திலும் தனது கருத்தை ஆழமாக பதிவிடுவார் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

அதற்கு ஏற்றார்போல் இன்று வெளியிடப்பட்டுள்ள பர்ஸ்ட்லுக் போஸ்டரில் சிலுவை அணிந்த குதிரையைப் பிடித்தப்படி ஜீவாவும், கதாநாயகி நடாஷா சிங் முஸ்லீம்களின் பர்தா அணிந்த படியும், அவர்கள் அருகே இருபுறமும் ராமர், ஆஞ்சநேயர் வேடமிட்ட இருவர் நிற்பது போலவும் படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பின்னணியில் 50 ஆண்டு இந்திய சுதந்திரத்தை குறிக்கும் சின்னமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*