Home » சினிமா » போலீசாக பிரபுதேவா நடிக்கும் காக்கி

போலீசாக பிரபுதேவா நடிக்கும் காக்கி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் மெர்குரி. இப்படத்தை தொடர்ந்து பிரபுதேவா புதிய படத்தில் நடிக்க உள்ளார். காக்கி என பெயரிடப்பட்டுள்ள இதில் முதல் முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மகேந்திரனும், சுரேஷ் மேனனும் நடிக்க உள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை ஏ.சி.முகில் இயக்க உள்ளார். நிமிச்சந் ஜபக், ஹரிஸ் ஜபக் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*