Home » சினிமா » ஆகஸ்ட் 10-ல் விஸ்வரூபம்-2 படம் ரிலீஸ்

ஆகஸ்ட் 10-ல் விஸ்வரூபம்-2 படம் ரிலீஸ்

உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வரூபம் 2 படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் நேரடியாகவும், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகிறது. இப்படத்தின் தமிழ் டிரைலரை இன்று மாலை ஸ்ருதி கமல்ஹாசனும், ஹிந்தி டிரைலரை அமீர்கானும், தெலுங்கு டிரைலரை ஜூனியர் என்டிஆரும் வெளியிடுகின்றனர்.

கமல்ஹாசன் நடித்து இயக்கி தயாரித்துள்ள விஸ்வரூபம்-2 படத்தின் ஹிந்தி பதிப்பை ரோஹித் செட்டி, ரிலையன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்பை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் மற்றும் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலல்ஹாசன் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 3 மொழிகளுக்கான டிரைலரை 3 பிரபலங்களும் வெளியிட உள்ளனர். மேலும் இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*