Home » சினிமா » அக்ஷய் குமாருடன் கைகோர்க்கும் கணேஷ் வெங்கட்ராமன்

அக்ஷய் குமாருடன் கைகோர்க்கும் கணேஷ் வெங்கட்ராமன்

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தென்னிந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிந்த நடிகர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானார். தற்போது கணேஷ் வெங்கட்ராமன் ஹார்பிக்கின் சுவச் பாரத் என்ற பிரச்சாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே வட இந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள அக்ஷய் குமாருடன் இதன் மூலம் கைகோர்த்துள்ளார்.

மும்பையில் நடந்த இதன் விளம்பர படத்தில் அக்ஷய், கணேஷ் வெங்கட்ராமன் கலந்து நடித்தனர். தூய்மை இந்தியா திட்டத்தின் முதல்படியாக ஹார்பிக் நிறுவனத்துடன் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.  கணேஷ் வெங்ட்ராமன் தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மை ஸ்டோரி படத்தில் ப்ரித்விராஜ், பார்வதி ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*