Home » விளையாட்டு » சேத்ரியால் சாம்பியனான இந்தியா: குவியும் பாராட்டுகள்

சேத்ரியால் சாம்பியனான இந்தியா: குவியும் பாராட்டுகள்

மும்பை, ஜூன் 11:  கேப்டன் சுனில் சேத்ரியின் அபார ஆட்டத்தால், இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

மும்பையில் நடந்து வந்த இன்டர்கான்டினென்டல் சர்வதேச கால்பந்து தொடரின் இறுதிபோட்டிக்கு இந்தியா, கென்யா அணிகள் தகுதிப்பெற்றிருந்தன. இந்த நிலையில், மும்பையில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில், இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் அபாரமாக விளையாடி, 2 கோல்களையும் அடித்து விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்தத் தொடரில் சுனில் சேத்ரி மொத்தம் 8 கோல்கள் அடித்துள்ளார். இதன்மூலம், சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 64 கோல்களுடன், அவர் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள மெஸ்ஸியின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.

இந்திய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றதை அடுத்து, பாராட்டுகள் குவிந்துவருகிறது. ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் உட்பட பலர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*