Home » விளையாட்டு » தொடரும் பிரேசிலின் ஆதிக்கம்

தொடரும் பிரேசிலின் ஆதிக்கம்

வியன்னா, ஜூன் 11: ஆஸ்திரியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி அபார வெற்றி பெற்றது.

வியன்னா நகரில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரியா – முன்னாள் சாம்பியன் பிரேசில் அணிகள் களம் கண்டன. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் கேப்ரியல் ஜீசஸ், நெய்மார், பிலிப் காட்டினோ ஆகியோர் சீரான இடைவெளியில் கோல் போட்டு அசத்தினர்.

இதனால், பிரேசில் 3-0 என்ற கோல்கணக்கில் ஆஸ்திரியாவை எளிதில் வீழ்த்தியது. பிரேசில் அணி, கடைசியாக ஆடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி உலக கோப்பை போட்டிக்குள் நுழையும் பிரேசிலுக்கு புத்துணர்ச்சியையும், கூடுதல் நம்பிக்கையையும் அளித்துள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டியில், பிரேசில் அணி, தனது முதலாவது லீக்கில் சுவிட்சர்லாந்தை 17-ம் தேதி சந்திக்கவுள்ளது.

உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக முறை (5 முறை) சாம்பியன் பட்டம் வென்று பிரேசில் அணி முன்னிலை வகிப்பது, குறிப்பிடத்தக்கது.

மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, துனிசியாவை எதிர்கொண்டது. இதில், முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*