Home » Flash News » தினகரனுக்கு மாஸ்டர் மு.க.ஸ்டாலின்:ஜெயக்குமார் 

தினகரனுக்கு மாஸ்டர் மு.க.ஸ்டாலின்:ஜெயக்குமார் 

சென்னை, ஜூன் 11:எம்பியாக இருந்த போது பார்லிமென்ட்டில் காவிரி பிரச்சனை குறித்து தினகரன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் அவருக்கு மாஸ்டர் ஸ்டாலின் தான் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:அரசு ஊழியர்களுக்கு அனைத்தும் செய்ய வேண்டும் என்று தான் அரசு நினைக்கிறது. இருப்பினும் சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பத்திரிகை சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும். இது அதிமுக. அரசில் தொடரும். புதிய தலைமுறை டிவி சேனல் மீதான வழக்கு பதிவு குறித்து, சட்டசபையில் சிலர் கேள்வி எழுப்பலாம்.

அதற்கு முதல்வர் பதில் அளிப்பார். எம்பியாக இருந்த போது பார்லிமென்ட்டில் காவிரி பிரச்னை குறித்து தினகரன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அவருக்கு மாஸ்டர் திமு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தான். ஆட்சி மாற்றம் வரும் என கருணாஸ் பேசுவது காலையில் ஒரு வாய்; மாலையில் ஒரு வாய் தான் என்று பேசுகிறார் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*