Home » சினிமா » ஒரே நேரத்தில் 3 மொழிகளில் ‘விஸ்வரூபம்-2’ டிரைலர்

ஒரே நேரத்தில் 3 மொழிகளில் ‘விஸ்வரூபம்-2’ டிரைலர்

சென்னை, ஜூன் 9: உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வரூபம் படத்தின் 2-ம் பாகம் டிரைலர் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வரும் 11-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்தி டிரைலரை அமீர்கானும், தெலுங்கு டிரைலரை ஜூனியர் என்டிஆரும், தமிழ் டிரைலரை ஸ்ருதி ஹாசனும் வெளியிடுகின்றனர். விஸ்வரூபம் 2 படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் நேரடியாகவும், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் வரும் 11-ம் தேதி ஸ்ருதி கமல்ஹாசன் வெளியிட உள்ளார். இந்தி படத்தின் டிரைலரை அமீர்கானும், தெலுங்கு டிரைலரை ஜூனியர் என்டிஆரும் வெளியிட உள்ளனர். அவர்களின் டுவிட்டர் தளங்களில் டிரைலர் வெளியிடப்படுகிறது.
கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

முதல் பாகத்தில் நடித்த சேகர் கபூர், வஹீதா ரஹ்மான், ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா ஜெரெமியா, ஜல்தீப் அலாவத், நாசர், ஆனந்த் மகாதேவன். யூசுஃப் ஹுசேன் மற்றும் ராஜேந்திர குப்தா உள்ளிட்ட அனைவரும் 2-ம் பாகத்திலும் நடித்துள்ளனர். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், ‘விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். 2-ம் பாகத்திற்காக பொறுமையடன் காத்திருந்த அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றி உள்ள அனைவரின் உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது. எங்களின் உழைப்பின் மீதான நம்பிக்கையே எங்களை மேலும் வலிமையடைய செய்கிறது’ என்று கூறினார்.

ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘உலக நாயகனின் நடிப்பில் வெளிவர உள்ள விஸ்வரூபம்-2 படத்தின் மூலம் கமல்ஹாசனுடன் இணைவதில் எங்கள் நிறுவனம் பெருமை கொள்கிறது’ என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*