Home » உலகம் » எரிமலை வெடிப்பில் சிக்கி 106 பேர் உயிரிழப்பு

எரிமலை வெடிப்பில் சிக்கி 106 பேர் உயிரிழப்பு

கவுதமாலா, ஜூன் 8:கவுதமாலாவில் எரிமலை வெடிப்பு காரணமாக இதுவரை 106 பேர் பலியாகி உள்ளனர்.

கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டி என்ற பகுதியில் இருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் உள்ள பியூகோ எரிமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடித்து சிதறியது. எரிமலை வெடித்த காரணத்தால் புகையும், எரிமலை குழம்பும் வேகமாக பரவியுள்ளது. இதை வேடிக்கை பார்த்த பலர்தான் முதலில் மரணம் அடைந்துள்ளனர்.

முதல் நாள் வேடிக்கை பார்த்த 25 பேர் மரணம் அடைந்தனர். ஆனால் மீட்பு பணி தாமதமான காரணத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 106 ஆக உயர்ந்தது.

முதலில் 8 கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்த இந்த எரிமலை குழம்புகள் இப்போது பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை ஆக்கிரமித்துள்ளது. இந்த புகை இன்னும் அந்த பகுதியில் இருக்கிறது. மொத்த கிராமம் இந்த எரிமலை வெடிப்பு காரணமாக மொத்த நகரமே அழிந்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*