Home » Flash News » உலக கோப்பை கால்பந்து: ரசிகரின் விநோத பயணம்

உலக கோப்பை கால்பந்து: ரசிகரின் விநோத பயணம்

பெர்லின், ஜூன் 8:உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண ரசிகர் ஒருவர் ஜெர்மனியில் இருந்து ரஷ்யாவிற்கு டிராக்டர் பயணத்தை மேற்கொண்டுள்ளாராம்.

உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் வரும் 14-ந் தேதி தொடங்க உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள், அந்நாட்டில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெர்மனி ரசிகரின் வினோத பயணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹூபோல்ட் விர்த் என்ற அந்த நபர், தனது பழமையான டிராக்டரில் இந்த பயணத்தை தொடங்கியுள்ளார். 20 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் அவர் வரும் 17 ஆம் தேதி ஜெர்மனி அணி பங்கேற்கும் முதல் போட்டியை காணும் வகையில் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*