Home » உலகம் » எரிமலை வெடித்து 25 பேர் உயிரிழப்பு

எரிமலை வெடித்து 25 பேர் உயிரிழப்பு

கவுதமாலா சிட்டி, ஜூன் 4:கவுதமாலா நாட்டில் உள்ள பியூகோ எரிமலை வெடித்து சிதறி ஏற்பட்ட புகையில் சிக்கி 25 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய அமெரிக்காவில் உள்ள கவுதமாலா நாட்டின் தலைநகரில் 40 கி.மீட்டர் தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது. ஆன்டிகுவா நகரமும் அமைந்துள்ளது. இங்கு காபி தோட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன.

இந்த நிலையில், பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது. அதில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவிற்கு செந்நிற, வெப்பம் மிகுந்த லாவா வெளியேறி வருகிறது. இதனால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல், தலைநகர் மற்றும் பிற பகுதிகளுக்கு பரவியுள்ளன.

இதில் 25 பேர் பலியாகி உள்ளனர். இந்த எரிமலை வெடிப்பினால் லா ஆரோரா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டு உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*