Home » Flash News » தூத்துக்குடியில் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு

தூத்துக்குடியில் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு

தூத்துக்குடி, மே 23:தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது தூத்துக்குடியிலிருந்து நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் தூத்துக்குடியில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேம்பார், குளத்தூர்,ஆறுமுகமங்களம், வேடநத்தம், ஒட்டப்பிடாரம், எப்போதும் வென்றான் ஊர்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*