Home » குற்றம் » 200 சவரன் நகை கொள்ளை

200 சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர் மே 22 : திருவள்ளூரில் தனியார் நிறுவனத்தின் ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டு விட்டு பீரோவில் இருந்த 200 சவரன் நகையை கொள்ளைடித்துக்கொண்டு வெளியில் நிறுத்தியிருந்த காரையும் எடுத்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜாஜிபுரம் பத்மாவதி நகரில் வசிப்பவர் ராமச்சந்திரன். ஆடிட்டரான இவர் தனது மனைவி ரஜிதாவுடன் நேற்று இரவு வழக்கம் போல் கதவை தாழ்ப்பாள் போட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் கதவை தட்டிய மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். முகமூடி அணிந்து கொண்டு உள்ளே புகுந்தனர். அப்போது சத்தம்கேட்டு எழுந்த தம்பதியை கத்தி மற்றும் உருட்டுக்கட்டையைக் காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்கள்  சத்தம்போடாமல் இருக்க இருவரையும் கட்டிப்போட்டனர்.

பின்னர் பீரோவின் சாவியை வாங்கி அவர்கள் வைத்திருந்த 200 சவரன் நகை, மற்றும் இரண்டு செல்போனையும் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த ஹோண்டா சிட்டி காரின் சாவியையும் வாங்கிக் கொண்டு அதிலேயே தப்பித்துள்ளனர்.
அதன் பிறகு ராமச்சந்திரனின் சத்தம் கேட்டு வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மகன் லோகேஷ் கீழே வந்து பார்த்தபோது பெற்றோர் இருவரும் கட்டிப்போடப் பட்டுநகைள் கொள்ளைடிக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து லோகேஷ் கொடுத்த புகார் தொடர்பாக திருவள்ளூர்
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் மோப்ப நாய் ராம்போ மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.   மோப்ப நாய் தெருவரை ஓடி நின்று விட்டது. மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூரில் வீட்டில் தாழ்ப்பாள் போட்டு தூங்கிக் கொண்டிருந்த   தனியார் ஆடிட்டர் வீட்டின் கதவை உடைத்து கணவன் மனைவி இருவரையும் கட்டிப்போட்டு 200 சவரன் நகை. 2 செல்போன் மற்றும் தப்பிச் செல்ல ஹோண்டா சிட்டி காரையும் திருடி சென்ற முகமூடி கொள்ளையர்களால் அந்த பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*