Home » Flash News » தூத்துக்குடி நிலவரம்: முதல்வர் அவசர ஆலோசனை

தூத்துக்குடி நிலவரம்: முதல்வர் அவசர ஆலோசனை

தூத்துக்குடி, மே 22: தூத்துக்குடி கலவர நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மாடி மற்றும் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

துப்பாக்கி சூடு நடத்த நேர்ந்தது ஏன் என்பது குறித்தும் வன்முறையை தடுக்க முடியாதது பற்றியும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மேற்கொண்டு கலவரத்தை தடுக்க வேண்டியது பற்றியும் முதலமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறதா என்பது பற்றிய விவரங்களும் உடனுக்குடன் முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடிக்கு மேலும் போலீஸ் படைகளை அனுப்புவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*