Home » Flash News » கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்

புதுடெல்லி, மே 18:கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பமாக நாளை மாலை 4 மணிக்கு சட்டசபையில் எடியூரப்பா தனக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்ற பிஜேபியின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பிஜேபியை ஆட்சி அமைக்க அம்மாநில கவர்னர் வாஜுபாய்வாலா அழைப்பு விடுத்தார்.

116 உறுப்பினர்கள் தங்கள் கூட்டணிக்கு இருந்தும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத கவர்னரின் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் உச்சநீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தது. இன்று காலை 10 மணிக்கு விசாரணை துவங்கியது. பிஜேபி சார் பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல்ரோகத்கி இரண்டு கடிதங்களை வாசித்தார். தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இல்லாததால் பிஜேபி ஆட்சிஅமைக்க முடியும் என்று அக்கட்சி சார்பில் எடியூரப்பா அளித்த கடிதத்தை அவர் படித்தார்.

தங்களுக்கு போதிய ஆதரவு இருப்பதாக எடியூரப்பா எழுதிய கடிதத்தையும் அவர் வாசித்தார். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சி களைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் பிஜேபிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பெயரை தற்போது வெளியிட இயலாது. சட்டசபையில் வாக்கெடுப்பு நடைபெற்றால் பிஜேபி பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருக்கிறது என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறி ஞர் அபிஷேக் மனுசிங் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பாகவே எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்.

தனிப்பெரும் கட்சியாக பிஜேபி வெற்றி பெற்று இருப்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோரி அவர் கடிதம் கொடுத்ததாகவும் சிங்வி கூறினார்.தனக்குள்ள ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையோ பெயர்களையோ பிஜேபி தெரிவிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தங்கள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் பட்டியலை கவர்னரிடம் அளித்து இருப்பதாகவும் அவர் வாதிட்டார். ஆகவே எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தது தவறானது என்று அவர் கூறினார்.

கவர்னரின் முடிவு அரசியல் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அர்ஜன்குமார் சிக்கிரி, அசோக் பூஷன் மற்றும் சரத் அரவிந்த் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு உள்ள ஒரே வழி கர்நாடக மாநில சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்துவது தான் என்று குறிப்பிட்டனர்.

எனவே நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா தனக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டனர். ஒருவார கால அவகாசம் நடத்த வேண்டும் என்றும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வாக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் பிஜேபி சார்பில் விடுத்த கோரிக்கைகளை நீதிமன்றம் நிராகரித்தது.இன்று தற்காலிக சபாநாயகரை நியமிக்க வேண்டும். அவர் வாக்கெ டுப்பை எப்படி நடத்துவது என்று முடிவு செய்வார் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கவர்னர் 15 நாள் அவகாசம் கொடுத்து இருந்த நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் அவகாசம் கொடுத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கவர்னரின் உத்தரவை ஆய்வு செய்வதற்கு உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதி சிக்கிரி கூறினார். எடியூரப்பாவை பதவியேற்க அழைப்பு விடுத்த கவர்னரின் நட வடிக்கை சரியில்லை என்று கூறி மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தாக்கல் செய்த மனுவும் இன்று விசா ரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குதிரை பேரத்துக்கு பயந்து பெங்க ளூரில் இருந்து ஐதராபாத்துக்கு கொண்டு செல்லப்பட்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது பெங்களூருக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*