Home » குற்றம் » கவுதம் கார்த்திக்கை கைது செய்ய வேண்டும்: மாணவர் கூட்டமைப்பு

கவுதம் கார்த்திக்கை கைது செய்ய வேண்டும்: மாணவர் கூட்டமைப்பு

சென்னை, மே 7: கவுதம் கார்த்திக் நடித்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் மிகவும் ஆபாசமாகவும், பெண்களை கேவலமாக சித்தரிப்பதாகவும் கூறி அந்த படத்தை தடை செய்து. அதில் நடித்த கவுதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளி வந்த படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இந்த படத்தை ஹரஹர மகாதேவகி படத்தை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் டைரக்ட் செய்துள்ளார். மிகவும் ஆபாசமாகவும், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்தும் உள்ள இந்த படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

இந்நிலையில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் மிகவும் ஆபாசமாகவும், பெண்களை கேவலமாக சித்தரித்தும் இன்றைய மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படும் வகையிலும் உள்ளதாக கூறி தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் இந்த படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் இந்த படத்தில் நடித்த நாயகன் கவுதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோரை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*