மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=27725
Export date: Wed Feb 20 18:06:49 2019 / +0000 GMT

சிறுமி பாலியலுக்கு தூக்கு தண்டனை


புதுடெல்லி, ஏப்.21: 12 வயதுக்கு உட்பட்ட  சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. சிறுமி பாலியல் பலாத்காரம் குறித்து நாடு முழுவதும் எழுந்துள்ள கொந்தளிப்பை தொடர்ந்து மத்திய அரசு இந்த சட்டத்தை உடனடியாக கொண்டு வர திட்டமிட்டுள்ளது.காஷ்மீர் மாநிலத்தில் கத்வா என்ற இடத்தில் சிறுமியை கடத்தி செல்லப்பட்டு கோயிலில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டு அவளுடைய உடல் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதேபோல உத்தரப்பிரதேசம் லுனோவில் பிஜேபி எம்எல்ஏ ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல சிறுமி பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாட்டின் வேறு சில பகுதிகளிலும் நடந்திருப்பது அதிர்வலைகளை ஏற்படத்தி இருக்கிறது.
இந்நிலையில் ஐந்து நாள் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று புது டெல்லி திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவையின் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.
நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள சிறுமி பாலியல் சம்பவங்களை கட்டுப்படுத்த கடும் சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டதாக தெரிகிறது. 12 வயதுகுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.மேலும் இத்தகைய குற்றங்களை புரிபவர்களை நாடு கடத்துதல்,  சொத்துக்களை பறிமுதல் செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே வங்கிகளில் மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடும் தொழிலதிபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வருவது குறித்தும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்படுகிறது.  பொருளாதார குற்ற சட்டங்களை திருத்தி விரைவில் வழக்குகளை முடிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அமைச்சரவை இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகு அவை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post date: 2018-04-21 10:35:50
Post date GMT: 2018-04-21 10:35:50

Post modified date: 2018-04-21 10:35:50
Post modified date GMT: 2018-04-21 10:35:50

Export date: Wed Feb 20 18:06:49 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com