Home » விளையாட்டு » சாக்லெட் தோனி

சாக்லெட் தோனி

சென்னை, ஏப். 16: சென்னையை சேர்ந்த பிரபல சாக்லெட் நிறுவனம் ஒன்று, தல தோனிக்கு சாக்லேட் சிலை செய்து அசத்தியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை அணிக்கு மகேந்திர சிங் தோனி, கேப்டனாக இருந்துவருகிறார். சென்னை ரசிகர்களின் பெரும் நேசத்திற்குரிய தோனிக்கு, ‘ தல’ என்ற செல்ல பெயரிட்டு அழைத்து ரசிகர்கள் கவுரவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேப்டன் தோனிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், சென்னையை சேர்ந்த பிரபல சாக்லெட் நிறுவனம் ஒன்று, தோனிக்கு சாக்லெட்டினால் ஆன சிலை செய்துள்ளது. 386 கி.கி. எடை கொண்ட அந்த சிலையானது 5 அடி 9 அங்குல உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அடுத்த மாதம் RK சாலையில் உள்ள கஃபே அருகில் வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி, தோனியின் ரசிகர்களுக்கு பிளாக் சாக்லெட் சாப்பிட்டது போன்ற உணர்வை தந்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*