Home » விளையாட்டு » ‘அனைத்து விதங்களிலும் முன்னேற வேண்டும்’ சி.எஸ்.கே. அணிக்கு கேப்டன் தோனி அட்வைஸ்

‘அனைத்து விதங்களிலும் முன்னேற வேண்டும்’ சி.எஸ்.கே. அணிக்கு கேப்டன் தோனி அட்வைஸ்

மொஹாலி, ஏப். 16: சென்னை அணி, அனைத்து விதத்திலும் முன்னேற வேண்டியிருக்கிறது என்று அந்த அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே ஆன ஐபிஎல் 12-வது ஆட்டம் மொஹாலியில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் பஞ்சாப்பின் மொகித் சர்மா திறமையாக பந்து வீசி, சென்னை அணியின் ரன்குவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டார். எனினும் கடைசி பந்தில் தோனி இமாலய சிக்ஸரை அடித்தார்.

5 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 44 பந்துகளில் தோனி 79 ரன்களைக் குவித்தும் சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை. எனினும் அவருடைய அதிரடி ஆட்டம், ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. கடைசி வரை போராடிய அவருடைய முயற்சிக்கு எல்லாத் தரப்புகளிலுமிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கடுமையாக முயற்சி செய்து தோல்வியடைந்ததால் சென்னை ரசிகர்களுக்கு இந்தத் தோல்வி வருத்தத்தை அளிக்கவில்லை. தோனியின் முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் ஒருபுறம் இருந்தபோதிலும், அடுத்த போட்டியில் கிடைக்க பெறும் வெற்றிக்கு இந்த தோல்வியை ஒருபாடமாக கருதி ரசிகர்கள் சமாதானமடைந்துள்ளனர்.

போட்டிக்கு பின்னர் பேசிய தோனி கூறுகையில், இரண்டாம் பாதியில் பனி அதிகமாக இருக்கும் என்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவு இல்லை. எந்த மாதிரியான பவுண்டர்களை நீக்க வேண்டும். எந்த மாதிரியான சுலபமான பந்துகளைத் தவிர்க்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களில் இன்னும் யோசித்துசெயல்பட வேண்டும். அனைத்து போட்டியிலும் வெற்றி அருகில்தான் இருக்கிறது. ஆனால், அணியில் உள்ளவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து விதத்திலும் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டியிருக்கிறது. எனது முதுகில் வலி ஏற்பட்டதால் போட்டியின் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் கடவுள் எனக்கு அதிக சக்தியை கொடுத்திருக்கிறார். அதன் விளைவாய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*