Home » சினிமா » தயாரிப்பாளராகும் நடிகை சதா

தயாரிப்பாளராகும் நடிகை சதா

நடிகைகளுக்குக் கதை பிடித்திருந்தால் அவர்களே அப்படத்தை தயாரிக்கவும் தயங்குவதில்லை. இதற்கு அண்மை உதாரணம் நயன்தாரா. அறம் வெற்றிப் படத்தின் கதை பிடித்து அதை அவரே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது. அவரைப் போல நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து டார்ச் லைட் என்கிற படத்தை எடுத்து வருகிறார். இயக்குநர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார்.

கான்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம் ஆர்.கே ட்ரீம் வேர்ல்டு, ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகியவற்றுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.டார்ச் லைட் படம் பற்றி இயக்குனர் மஜீத் கூறுகையில், வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்கள் பற்றிப் பேசுகிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்த பெண்கள் பற்றிய கதை இது .90களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகிறது என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*