Home » சென்னை » ஸ்டாலின், வைகோ திருமா ஆர்ப்பாட்டம்

ஸ்டாலின், வைகோ திருமா ஆர்ப்பாட்டம்

சென்னை,ஏப்.16: எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஸ்டாலின்,வைகோ, திருமா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.க. துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் ஆகியோரும் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து பேசினர். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் காசிநாத் மகாஜன் என்ற ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர், தன்மீதான எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.

அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 20-ந்தேதி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர் ஒருவர் மீது கொடுக்கப்படும் புகாரின் பேரில் அவரை உடனடியாக கைது செய்து விடக்கூடாது என்றும், டி.எஸ்.பி. தலைமையில் பூர்வாங்க விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே மேல் அதிகாரி அனுமதியுடன் கைதுசெய்ய வேண்டும் எனவும் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதிலும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக வட மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கலவரத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் இந்த சட்டத்தை நீர்த்து போவதை கண்டித்தும் மேலும் சட்டப்பிரிவு 9-வது அட்டவணையில் இந்த சட்டத்தை சேர்க்கக்கோரியும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து பேசினர். இதில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*