Home » Flash News » விஜயகாந்திற்கு ரஜினி வாழ்த்து

விஜயகாந்திற்கு ரஜினி வாழ்த்து

நடிகர் விஜயகாந்த் சினிமாத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், நாசர், மனோபாலா, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விஜயகாந்தின் கட்சியான தேமுதிக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த விழா காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நடைபெற்றது.

கோயில், சர்ச், மசூதி என மூன்று தோரண நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் நடிகர்களுடன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சத்யராஜ், சரத்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் விஜயகாந்தின் உழைப்பையும் அவரது நல்ல பண்புகளையும் விளக்கி பேசினர்.

விழாவை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ அனுப்பி இருந்தார். அதில் சகோதரர் விஜயகாந்த் 40 ஆண்டுகள் கலைத்துறையில் பயணித்துள்ளார். அவர் நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தவர். திரைக்கலைஞர்களுக்கு கஷ்டம் என்றால் ஓடோடோடி உழைக்க கூடியவர். நல்ல பண்பாளர். சினிமா மட்டுமின்றி அரசியலிலும் வெற்றி கண்டவர்.

இந்த சாதனை நிகழ்த்தி உள்ள இந்த வேளையில் அவர் தனது உடல் நிலையையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அவருக்கு இறைவன் நல் ஆரோக்கியத்தை தர வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*