Home » Flash News » கிருஷ்ணபிரியா, விவேக்கிடம் விசாரணை

கிருஷ்ணபிரியா, விவேக்கிடம் விசாரணை

சென்னை,ஏப்.16:ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று மதியம் விவேக் ஜெயராமன், கிருஷ்ணப்ரியா, ஜெயலலிதா வீட்டு சமையல்காரர் ராஜம்மாள் உள்ளிட்ட 8 பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். 75 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஜெயலலிதா மரணமடைந்தது

சர்ச்சைக்குள்ளாகியது. இதனை யடுத்து தமிழக அரசு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.

இதனையடுத்து விசாரணை ஆணையம் 30க்கும் மேற்பட்டோர்க்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து மீண்டும் இளவரசி அண்ணன் மகள் கிருஷ்ணபிரியாவும், சசிகலா அண்ணன் மகன் விவேக் ஜெயராமனும் மற்றும் அரசு மருத்துவர்கள் சுதா சேஷையன், சுவாமிநாதன், அப்பலோ மருத்துவர் சத்யபாமா, வெங்கட்ரமணன், கார்த்திகேயன், ஜெயலலிதா சமையலர் ராஜம்மாள் உள்ளிட்ட 8 பேரும் வரும் 16ம் தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது. இந்த 8 பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொள்ளவதற்காக ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் மாலை 2 மணியளவில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத் தில் 8 பேரும் ஒருவர் பின் ஒருவராக ஆஜராகினார். இவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அளிக்கப்பட்ட சிகிச்சை, அவரை யார் சந்தித்தனர் உள்ளிட்டவை குறித்து குறுக்கு விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*