Home » Flash News » கவர்னருக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

கவர்னருக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, ஏப்.16:தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு இன்று 78-வது பிறந்தநாள். இதையொட்டி வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில், மகிழ்ச்சியான இந்த நாளில் உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் சிறப்பான சேவை ஆற்றிட தங்களுக்கு இறைவன் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டி ருந்தார்.

இந்த வாழ்த்துக்கு கவர்னர் பன்வாரி லால் புரோகித், முதல்வர் எடப் பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவர்னருக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தியில், தமிழக மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் தாங்கள் பணியாற்றுவதற்கு ஆரோக்கியமான நீண்ட வாழ்வை தங்களுக்கு இறைவன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*