Home » Flash News » நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

சென்னை, ஏப்.16:தமிழக அமைச்சர்கள் பற்றி கருத்து சொன்னதற்காக, தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் டிடிவி. தினகரன் ஆஜரானார்.

நீதிமன்றத்திற்குள் தினகரன் ஆதரவாளர்கள் கூட்டமாக வந்ததால் நீதிபதி மீண்டும் வழக்கை தள்ளி வைத்து 1.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.கடந்த 27.02.2018 ஆன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி. தினகரன், ‘ தமிழக அமைச்சர்கள் அனைவரும் மனநிலை பாதிக்கப் பட்டுள்ளதாக‘ கருத்து தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பான செய்தி கடந்த 28.02.2018 அன்று நாளிதழில்களில் வெளியானது.தினகரன் இந்த பேச்சானது , தமிழக அரசுக்கும், அமைச்சரவையில் பங்கேற்று இருக்கும் அமைச்சர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறான கருத்தை தெரிவித்துள்ளார். எனவே, அவ்வாறு பேசிய டிடிவி. தினகரன் மீது, கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஆய்வு செய்த நீதிபதி சுபாதேவி, இவ்வழக்கில் இன்று நேரில் ஆஜராகும்படி, டிடிவி. தினகரனுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு இருந்தார். அந்த வழக்கு இன்று
விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி. தினகரன் நீதிமன்றத்தில் ஆஜரானார். டிடிவி தரப்பு, மனுவின் நகலை வழங்க நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர்.

அப்போது கூட்டமாக வந்துள்ளீர்கள். என்னால் இன்று வழக்கை விசாரிக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்து, விசாரணையை 28.0618 அன்று தள்ளி வைத்தார்.ஆனால் டிடிவி தரப்பு வழக்கறிஞர்கள், ‘இன்று அவர் ஆஜராகி விட்டார். கூட்டத்தை வெளியே அனுப்பி விடுகிறோம். வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும்‘ என்று கேட்டுக் கொண்டனர்.

பின்னர் நீதிபதி தனக்கு வேலைகள் உள்ளது. எனவே மதியம் 1.30 மீண்டும் ஆஜராக வேண்டும் என்று கூறி வழக்கை தள்ளி வைத்தார்.முன்னதாக தினகரன் நீதிமன்றத் திற்கு வந்தபோது, ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கூட்டமாக வந்ததால் செசன்ஸ் நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*