Home » Flash News » குமரியில் காற்றழுத்த தாழ்வு நிலை

குமரியில் காற்றழுத்த தாழ்வு நிலை

சென்னை,ஏப்.15:குமரி மாவட்ட கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீட்டிப்பதால், வடதமிழகம், புதுவை உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியே வர மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் விடுமுறை தினங்களில் கடற்கரை, பூங்கா, மலை பிரதேசங்களுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். மேலும் வெப்பத்தின் காரணமாக அணைகள், ஏரிகள், நீர்நிலைகளில் நீர் இருப்பு குறைய தொடங்கியுள்ளது.

தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் , தென் மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்து வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில்: மாலத்தீவு ஓட்டியுள்ள குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த 24மணி நேரத்தில் குமரி, மதுரை சித்தாரம்பட்டி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென்தமிழகம், வட தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*