Home » ஆசிரியர் பரிந்துரை » அமெரிக்கா-ரஷ்யா போர்:தடுக்க ஐநா சபை முயற்சி

அமெரிக்கா-ரஷ்யா போர்:தடுக்க ஐநா சபை முயற்சி

நியூயார்க்,ஏப்.15:சிரியா மீது அமெரிக்க கூட்டு படைகள் வான் தாக்குதலை விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யா இடையே போர் மூளுவதை தடுக்க ஐநா சபை அவசரமாக கூடுகிறது.
அரபுநாடான சிரியாவில் 2012-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு புரட்சி படையினர் மற்றும் மதவாத அமைப்பினர் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.இந்த படையினருக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன.

புரட்சி படையினர் நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி வைத்துள்ளனர். அவற்றை மீட்பதற்கு சிரியா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.ரஷிய ராணுவம் நேரடியாக அவர்களுடன் சேர்ந்து புரட்சி படையுடன் போரிட்டு வருகிறது. இதன் காரணமாக புரட்சி படையிடம் இருந்த பல பகுதிகள் மீட்கப்பட்டன.

தலைநகரம் டமாஸ்கஸ் அருகே உள்ள கிழக்கு கூடா என்ற நகரம் புரட்சி படையினரிடம் இருந்தது. அந்த நகரை மீட்பதற்கு சமீப காலமாக சிரியா ராணுவம் கடுமையாக போரிட்டது. தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கூட்டா பகுதி கடந்த சில வாரங்களுக்கு முன்ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 40 பேர் பலியாகினர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்..இதற்கு பதிலடியாக நேற்று சிரியாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அமெரிக்க கூட்டுப்படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷியா கேட்டுக் கொண்டது. இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டாரஸ்,உரையாற்றவுள்ளதாக ஐ.நா. தலைமயகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டாரஸ் கூறுகையில்,சிரியா விவகாரத்தில் அமெரிக்காவும் ரஷியாவும் பரஸ்பரம் போட்டிப்போட்டு கொண்டு இருக்காமல் நல்ல முடிவெடுப்பதற்காக தங்கள் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து பொதுகருத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*