Home » Flash News » திமுக மீது ஓபிஎஸ் தாக்கு

திமுக மீது ஓபிஎஸ் தாக்கு

மதுரை,ஏப்.15:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அரசு அலுவலக கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினர்.

இதனிடையே, காவிரி பிரச்சனையில் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்
செல்வம், திமுக, காங்கிரஸ் போராட்டம் நடத்துவதை குறை கூறினார்.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளுக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மதுரை மாவட்டத்தில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மதுரை மக்கள் தமிழக அரசுக்கு நீண்ட நாள் கோரிக்கைவிடுத்து வந்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் மதுரை மாவட்ட கருவூலம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட கலால் அலுவலகம், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம், ஆதிதிராவிட நல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்களுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய் பேரிடர் மோலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். எம்ஜிஆர் 100-வது பிறந்தநாள் தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முதல் நிகழ்ச்சி நடத்தப்பட்ட போது, அதில் கலந்து கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 27 கோடி ரூபாயில் மதுரையில் பல்வேறு கட்டிடங்கள் எம்ஜிஆர் நூர்றாண்டு விழா கட்டிடமாக கட்டப்படும் என அறிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் அரசு அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஓதுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், இன்று அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கு கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை சென்றடைந்தார். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது நகரும் நடைமேடை முதலமைச்சர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சி முடிந்து சேலம் செல்லும் முதலமைச்சர் அங்கு தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையம் கிராமத்திற்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி தனது தாயை சந்தித்து நலம் விசாரித்து விட்டு வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

எடப்பாடி வட்டம், நெடுங்குளம் கிராமத்தை முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான சு.முத்துசாமியின் மனைவி எம்.ஜெயலட்சுமி நேற்று இறந்தார். முத்துசாமி எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ஆவார்.

இதனால் அவரது வீட்டிற்கு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முத்துசாமி மற்றும் அவரது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் . பின்னர் அங்கிருந்து சேலத்திற்கு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரவு சென்னைக்கு புறப்பட்டு செல்வார் என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்திற்கு வருவதையொட்டி அவர் செல்லும் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்வதற்கு முன்பாக நிருபர்களிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்: தமிழகத்தின் பாரம்பரியமான புத்தாண்டு சித்திரை முதல் நாள்தான். இதை சட்டசபையில்ஜெயலலிதா உறுதி செய்தார். காவிரி பிரச்னையில் பல கட்டங்களை கடந்து, தற்போது உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்ப்பு கிடைத்துள்ளது. 2007ல் காவிரி பிரச்னையில் இறுதி தீர்ப்பு வந்தபோது,24 மணி நேரத்தில் மத்தியில் இருந்த காங்.,-தி.மு.க., கூட்டணி அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்க முடியும்.அமைக்காமல் அவர்கள் வரலாற்று பிழை செய்து, தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார்கள்.

ஆட்சியில் இருந்த அவர்கள் அப்போது ஏதும் செய்யாமல், தற்போது தமிழக மக்களை ஏமாற்றி போராட்டம்நடத்துகிறார்கள். இன்னும் ஓரிரு ந õட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைய நல்ல முடிவு கிடைக்கும். என்றார்.

இதே போன்று சென்னையில் இன்று நிருபர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்: காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் நியாயத்தை ö பற்று தர அனைத்துமுயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஸ்கீம் எனும் வார்த்தை அர்த்தம் வாரியம் தான். என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*