w
Home » இந்தியா » 2018ல் சந்திராயன்-2 விண்ணில் பாயும்: இஸ்ரோ தலைவர்

2018ல் சந்திராயன்-2 விண்ணில் பாயும்: இஸ்ரோ தலைவர்

நெல்லை, ஏப்.15: 2018-ல் சந்திராயன்-2 விண்கலம் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

நெல்லையில் செயற்கைகோள் தகவல் சேகரிப்பு மையத்தை இன்று தொடங்கி வைத்த அவர், செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் 2-வது சந்திராயன் விண்கலம் 2018-ல் ஏவப்படும் என்றும், இதன் மூலம் சந்திரன் பற்றிய அறிய தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மார்ச் மாதம் கடைசியில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டு, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட செயற்கைகோளுடன் தற்போது தொடர்பு கிடைத்து இருப்பதாகவும் சிவன் மேலும் கூறினார்.

இந்த செயற்கைகோள் விண்ணில் காணாமல் போய்விட்டதாகவும் இதன் பயனாக இஸ்ரோவின் முயற்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிட்டதாகவும் கருதப்பட்டது. ஆனால் விஞ்ஞானிகளின் இடை விடாது முயற்சி காரணமாக செயற்கை கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இஸ்ரோவுக்கு கிடைத்த இன்னொரு வெற்றியாகும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*