Home » Flash News » கர்நாடக தேர்தலில் தினகரன் அணி போட்டி

கர்நாடக தேர்தலில் தினகரன் அணி போட்டி

பெங்களூரு, ஏப்.15:கர்நாடக மாநில சட்டசபை தேர்தலையொட்டி பெங்களூருவில் தினகரன் ஆதரவாளர்கள் கூட்டம் அவைத்தலைவர் சம்பத் தலைமையில் நடந்தது. இதில் புகழேந்தி, உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.பின்னர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

டி.டி.வி. தினகரன் வழிகாட்டு தலின் பேரில் பெங்களூ ருவில் உள்ள காந்திநகர், சாந்தி நகர், சிக்கபேட்டை, புலிகேசிநகர், சிவாஜிநகர், ஆளேகல், சி.வி.இராமன்நகர், கோலார் மாவட்டத்தில் உள்ள தங்கவயல், பங்காருபேட்டை, ஷிவமொக்கா மாவட்டத்தின் ஷிவமொக்கா நகரம் உள்ளிட்ட 20 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*