Home » Flash News » செயற்கைகோள் வெற்றி: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

செயற்கைகோள் வெற்றி: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

ஸ்ரீஹரிகோட்டா, ஏப்.12:வழிகாட்டி செயற்கைக்கோள் வரிசையில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் இன்று அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு இருப்பது தமக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் மார்ச் 29-ம் தேதி அனுப்பப்பட்ட ஜி.சாட் ஆர்.ஏ. என்ற செயற்கைகோள் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இன்று அனுப்பப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ என்ற செயற்கைகோள் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையை அடைந்து இருப்பது இஸ்ரோ விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுமார் 1.4 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி 41 ராக்கெட் மூலம் அனுப்பி, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த செயற்கைக் கோளில் இருந்து பெறும் தகவல்கள், மீனவர்களுக்கு மிகவும் உதவும் வகையில் இருக்கும். மேலும் இந்தச் செயற்கைக்கோள் கடல்வழி போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து மற்றும் கண்காணிப்பிற்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.இது மாற்று செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் இரண்டாவது முயற்சியாகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அனுப்பப்பட்ட பி.எஸ்.எல்.வி-ன் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஹெச் செயற்கைக்கோள் அதன் வெப்ப தகடுகள் பிரியாததால் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*