w
Home » Flash News » மனங்களை வெல்வோம்:பிரதமர் மோடி

மனங்களை வெல்வோம்:பிரதமர் மோடி

சென்னை, ஏப்.12:திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி நாட்டில் அமைதியை ஏற்படுத்தி மனங்களை வெல்வோம் என்று குறிப்பிட்டார்.

திருவிடந்தை ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கிவைப்பதற்காக இன்று காலை சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 6.40 மணிக்கு டெல்லியில் இருந்து விமானப்படை யின் தனி விமானத்தில் புறப்பட்ட அவர் காலை 9.20 மணிக்கு மீனம்பாக்கம் வந்து சேர்ந்தார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொன்னாடை போர்த்தி மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.

அதை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல் வம், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தியும், மலர்க்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர்.

வரவேற்பு முடிந்ததும் மாமல்லபுரம் போய் சேர்ந்தார். அங்கிருந்து காரில் ராணுவ கண்காட்சி நடைபெறும் திருவிடந்தை புறப்பட்டு சென்றார். காலை 10.15 மணிக்கு திருவிடந்தை ராணுவ கண்காட்சியில் விழா தொடங்கியது. முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. விழா தொடங்குவதற்கு முன் காணொலி காட்சி மூலம் ராணுவத்தின் சாதனை கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பின்னர் ராணுவ இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே வரவேற்று பேசினார். பின்னர் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ தளவாட உற்பத்தியும் சேர்க்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் தளவாட உற்பத்தியில் இந்தியா தனி சாதனை படைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இதனையடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ஜெயலலிதாவின் கனவு திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

2023 தொலைநோக்கு திட்டத்தின் கீழ் விமான உதிரி பாகங்கள் உற்பத்தியும், தமிழகத்தில் நடைபெற உள்ளது என்று குறிப்பிட்டார். இந்த ராணுவ கண்காட்சியை தமிழகத்தில் நடத்துவதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதையும், 2023 தொலைநோக்கு திட்டத்தை மறைந்த ஜெயலலிதா அறிவித்து அதை செயல்படுத்த எடுத்த முயற்சியையும் விளக்கினார்.

இதன் பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அனைவருக்கும் காலை வணக்கம். நமஸ்காரம் என்று தமிழில் அவர் கூறினார்.தொடர்ந்து பிரதமர் பேசியதாவது:-

இங்கு வந்திருப்பவர்களில் சிலர் இதற்கு முன் ராணுவ கண்காட்சிகளில் பங்கேற்றிருக்கலாம். ஆனால் எனக்கு இதுவே முதல் ராணுவ கண்காட்சி ஆகும். இது இந்தியாவின் 10-வது கண்காட்சி என்பதில் பெருமிதம் அடைகிறேன். தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இந்த காஞ்சிபுரம் மண்ணில் இவ்வளவு பேர் கூடியிருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.இந்த கடற்கரை வரலாறு படைத்த மண். சோழர்கள் காலத்தில் வலிமையான கடற்படை அமைத்து உலகளவில் வணிகம் செய்துள்ளனர். இந்தியா உலகத்திற்கு அமைதியையும், சகோதரத்துவத்தையும் கற்பித்த நாடு. புத்தர், அசோகர் போன்ற வரலாற்று நாயகர்கள் அமைதியை போதித்தார்கள். இந்த போதனைகளில் இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது.

சுதந்திர இந்தியாவில் நமது ராணுவம் வலிமை மிக்கது. நமது நாடு எந்த நாட்டையும் ஆக்கிரமிக்காது. அதே சமயம் நமது மண்ணை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம். வெவ்வேறு விதமான மக்கள் இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்பதே நமது பலம். ராணுவ தளவாட உற்பத்தியில் நாம் சிறந்து விளங்குவது பாதுகாப்புக்கு மேலும் ஒரு வலிமை சேர்ப்பதாக அமைகிறது.நமது மக்களையும், எல்லையையும் பாதுகாக்கும் அதே நேரத்தில் நாட்டில் அமைதியை பாதுகாக்கும் கடமையும் அரசுக்கு இருக்கிறது. அமைதியின் மூலம் மனங்களை நாம் வெல்ல வேண்டும்.

நம்முடைய தொழில் யுக்தி, தொழில் சுதந்திரமும் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். 2014- மே மாதத்தில் ராணுவ தளவாட ஏற்றுமதி எண்ணிக்கை 118 என்ற அளவில் இருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு 577 பில்லியன் டாலர் அடுத்த 4 ஆண்டுகளுக்கு உள்ளாக ஏற்றுமதிக்கான அனுமதி 794 ஆக உயர்ந்திருக்கிறது. இதன் மொத்த மதிப்பீடு 1.3 பில்லியன் டாலர் ஆகும்.

நமது கொள்கைகளில் குளறுபடி இருந்ததால் தான் ராணுவத்தின் தயார் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு காரணம் சுறுசுறுப்பற்ற தன்மை என்பதை நாம் தெரிந்து கொண்டோம். நமது திறமை- குறிக்கோள் மறைக்கப்பட்டிருந்திருக்கிறது. இதை நாம் வெளிப்படுத்தி வருகிறோம்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*