Home » Flash News » ஜெ. கனவை நிறைவேற்றுவோம்புமுதலமைச்சர்

ஜெ. கனவை நிறைவேற்றுவோம்புமுதலமைச்சர்

சென்னை,ஏப்.12:தமிழகத்தில் பாதுகாப்பு தளவாட ஆலைகளை ஏற்படுத்துவதின் மூலம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வின் கனவை நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.இதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும் என்று அவர் கூறினார்.

திருவிடந்தையில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சி துவக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

இங்கு பாதுகாப்பு கண்காட்சியை பிரதமர் திறந்து வைப்பது மிகவும் பொருத்தமானது. உள்நாட்டிலேயே உருவாக்க முயன்ற பிரதமர் மோடியின் லட்சியத்தை நிறைவேற்ற இது உறுதுணையாக இருக்கும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2023 தொலைநோக்கு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தொழில் வளாகங்கள், விண்வெளி பூங்காக்கள் போன்ற வற்றை அமைக்க வேண்டும் என்று விரும்பினார். அவருடைய இந்த கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சென்னை, ஓசூர், திருச்சி, கோவை ஆகிய இடங்களில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆலைகளை அமைக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இத்தகைய பாதுகாப்புத்துறைக்கான வளாகங்களை உருவாக்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழகம் கொண்டு இருக்கிறது. திற மையான மனித சக்தியும் இங்கு உள்ளது.

இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற பாதுகாப்பு அமைச்சருடன் தமிழக அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளது. பிரதமர் மோடி எடுத்துள்ள முயற்சிகளுக்கு தமிழக மக்கள் சார்பாகவும், அரசின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தொழில் வளர்ச்சி பெறுவதற்கு தேவையான பல முயற்சிகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. 30 நாட்களுக்குள் ஒற்றை சாளர முறையில் புதிய ஆலைகள் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.

இன்னும் ஓரிரு மாதத்தில் ஆன் லைன் மூலம் தொழில் தொடங்கு வதற்கான அனுமதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம்.ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது.எங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*