Home » சினிமா » மற்றுமொரு வெப் சீரிஸ் எ ஸ்டோரி

மற்றுமொரு வெப் சீரிஸ் எ ஸ்டோரி

எ ஸ்டோரி என்கிற வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது. நிமேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா நடித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் நிமேஷ் மல்லி என்ற குறும்படத்திற்காக மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பு மூவிஸ் நிறுவனம் சார்பில் பாபு தூயவன் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த நிறுவனம் ஏற்கனவே நட்டி நடராஜ் நடித்த கதம் கதம் மற்றும் இட்லி ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே அப்பு மூவிஸ் எனும் யுடியூப் சேனலை தொடங்கி, தமிழ் சினிமாவின் வியாபாரம் பற்றிய தகவல்களை இயக்குனர் கேபிள் சங்கர் மூலம் அளித்திருந்தனர். இந்த சேனலின் கிரியேட்டிவ் ஹெட் – கேபிள் சங்கர். அதுமட்டுமில்லாமல் ஜோதிடம், ஸ்டாண்டப் காமெடி, ஷாட் பிலிம்ஸ், சமையல் நிகழ்ச்சிகள் என பலவிதமான வீடியோக்களை அளித்திருந்தனர்.

தற்போது முதன் முறையாக எ ஸ்டோரி என்கிற இந்த வெப் சீரிஸை தயாரிக்கின்றனர்.
இந்த வெப் சீரிஸிற்கு ஹரி இசையமைத்துள்ளார். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, பிரவீன் பாஸ்கர் என்பவர் படத்தொகுப்பு செய்துள்ளார். திலக் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*