Home » சினிமா » ஓவியாவை தொடர்ந்து தலைமுடியை தானம் செய்த நிஷா

ஓவியாவை தொடர்ந்து தலைமுடியை தானம் செய்த நிஷா

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சையால் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தலைமுடி உதிர்ந்துவிடுகிறது. அவர்களுக்கு விக் செய்துகொள்வதற்காக பிரபலங்கள் சிலர் தங்கள் தலைமுடியை அவ்வப்போது தானம் அளிக்கின்றனர். சமீபத்தில் நடிகை ஓவியாவும் தனது தலைமுடியை இதற்காக தானம் அளித்திருந்தார்.

அபியும் நானும், உன்னை போல் ஒருவன், தொடரி, நாயகி, இணையதளம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் டி.வியில் நடித்து வந்த நடிகை நிஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். நிஷா தற்போது தனது தலைமுடியின் ஒரு பகுதியை கேன்சர் நோயாளிகளுக்காக தானம் அளித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் தனது இணைய தள பக்கத்தில் கூறும்போது , கேன்சர் நோயாளிகளுக்கு தலைமுடியை கொடுக்கும் ஒரு நல்ல விஷயம் செய்துள்ளேன். எனது தலைமுடி யாரோ ஒருவருக்கு விக் ஆக மாறுவதில் எனக்கு மகிழ்ச்சி என குறிப்பிட்டிருக்கிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*