Home » சினிமா » அலைபாயுதே 2 படத்தில் நான் நடிப்பேனா? ஸ்வாதிஷ்டா

அலைபாயுதே 2 படத்தில் நான் நடிப்பேனா? ஸ்வாதிஷ்டா

மிஷ்கினின் சவரக்கத்தி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஸ்வாதிஷ்டா. தமிழ் பெண்ணான இவர் தன்னுடைய சினிமா வாய்ப்பு பற்றியும் எதிர்கால படங்கள் பற்றியும் கூறியதாவது:-
“நான் இளங்கலையில் எஞ்சினியரிங்கும், முதுகலையில் ஜர்னலிஸமும் படித்து, தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தேன். நடனத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம். இந்நிலையில் சவரக்கத்தி படத்திற்காக மிஷ்கின் அழைத்ததும் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

சவரக்கத்தி படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள பல நினைவுகள் இருக்கின்றன. என்னைப் போல ஒரு புதுமுகத்துக்கு மிகப்பெரும் இயக்குனர்களான மிஷ்கின், ராம் ஆகியோரை படப்பிடிப்பில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். ஆனால் எனக்கு சவரக்கத்தியில் நானும் நடிக்கிறேன் என்ற மேலான, உயர்ந்த உணர்வு தான் இருந்தது.
தற்போது ஜீவாவுடன் இணைந்து ‘கீ’ படத்தில் நடித்து வருகிறேன். ஜீவாவுடன் நடித்தது மிகவும் ஜாலியான அனுபவம். என்னுடைய பெரும்பாலான காட்சிகள் ஜீவாவுடன் சேர்ந்து தான். சுஹாசினி, ராஜேந்திர பிரசாத், ஆர்ஜே பாலாஜி ஆகியோருடன் நல்ல பல தருணங்கள் அமைந்ததுஎன்றார்.

நான் பிரமித்து பார்க்கும், அவரின் பாதையில் பயணிக்க விரும்பும் ஒரு நடிகை ஷாலினி அஜித்குமார். இளம் வயதிலேயே சிவாஜி, ரஜினி ஆகியோரோடு இணைந்து நடித்தது, அவருடைய வசீகரம், திறமை எல்லாம் அவரின் தனிச்சிறப்பு. மேலும், மணிரத்னம் அலைபாயுதே 2 படத்தை எடுப்பார்,
அதில் என்னை நாயகியாக நடிக்க வைப்பார் என்ற மெய்மறந்த வேடிக்கையான கனவும் எனக்கு வரும் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*