w
Home » Flash News » தமிழகம் அமைதி பூங்கா:முதலமைச்சர் பெருமிதம்

தமிழகம் அமைதி பூங்கா:முதலமைச்சர் பெருமிதம்

சென்னை, மார்ச் 22:அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கியதன் காரணமாக தமிழகத்தில் இருந்த ரவுடிகள் எல்லாம் வெளி மாநிலத்திற்கு ஓடி விட்டார்கள். தற்போது சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு அமைதிப்பூங்காவாக தமிழகம் திகழ்ந்து வருவதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் பட்ஜெட் மீதானா விவாதத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசுகையில், அமைதி, வளம், வளர்ச்சி என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்து அதன் வழியில் நீங்கள் செயல்படுவதாக தெரிவித்துள்ளீர்கள். ஆனால் ரவுடிகள் எல்லாம் ஒன்றாக கூடி கத்தியில் கேக் வெட்டும் சம்பவங்கள் எல்லாம் தமிழகத்தில் அரங்கேற தொடங்கி உள்ளது.
நாளுக்கு நாள் செயின் பறிப்பு, வீடுகளில் கொள்ளை உள்ளிட்டவைகள் அதிகரித்து

சட்டம்ஒழுங்கு தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் எடப்பாடி: காவல்துறை சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இரும்புகரம் கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக ரவுடிகள் எல்லாம் வெளி மாநிலத்திற்கு ஓடி விட்டார்கள். சட்டம்ஒழுங்கு சரியாக பாதிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. மத்திய அரசும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சென்னை இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்புக்கு உகந்த மாநிலங்களில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதே போன்று சிறந்த காவல் நிலையம் தமிழகத்தில் இருந்து மத்திய அரசு தேர்வு செய்து விருது கூட வழங்கி உள்ளதை ஏற்கனவே இந்த சட்டசபையில் தெரிவித்துள்ளேன்.

அந்தவகையில் தமிழகத்தில் எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல் அமைதி பூங்கா வாக திகழ்ந்து வருகிறது.துரைமுருகன்: தொழில்துறையை பொறுத்தவரை முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம், ஆந்திரா, கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை விட பின்தங்கி உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் மதுரை முதல் தூத்துக்குடி வரை தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என கடந்த 3 ஆண்டுகளாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கான நடவடிக்கைகள் என்ன மேற்கொள்ளப்பட்டுள்ளது?

அமைச்சர் எம்.சி.சம்பத்: மத்திய அரசு இருவிதமான அறிக்கைகள் வெளியிடப்படுகிறது. ஒன்று தொழில் முதலீடு தொடர்பாக உத்தேச அறிக்கையும், ரிசர்வ் வங்கி மூலம் அந்நிய செலாவணி எந்த மாநிலம் ஈர்க்கிறது என இரு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. உத்தேச பட்டியலை கணக்கில் எடுத்து கொள்ளாமல் அந்நிய முதலீட்டை நேரடியாக ஈர்த்த மாநிலத்தில் தமிழகம் தொடர்ந்து 4-ம் இடத்தை பிடித்து வருகிறது.

2011-2017 வரை 19,750 கோடி மில்லியன் டாலர் அந்நிய முதலீட்டை ஈர்த்து தமிழகம் தொடர்ந்து 4-ம் இடத்தை பிடித்து வருகிறது. தொழில் முதலீடு உத்தேசம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஆகவே தொழில் தொடங்க உத்தேசம் செய்வதை கணக்கில் எடுத்து கொள்ள கூடாது.

முதல்வர் எடப்பாடி: சாலை விரிவாக்கம் என்பது நிலங்களை கையகப்படுத்தி அதன் மூலமே மேற்கொள்ள முடியும். மதுரை முதல் தூத்துக்குடி வரை தொழில்வழித்தடம் என்பது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறும் போது சிலர் நீதிமன்றத்திற்கு சென்று விடுகிறார்கள். அவர்களை சமரசம் செய்து அதன் பின்னரே பணிகள் மேற்கொள்வதால் சிறிது கால தாமதம் ஏற்படுகிறது.

மேலும்தமிழகத்தில் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாக மத்திய அமைச்சரும் இருமுறை தமிழகம் வந்து ஆய்வு செய்து ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.மேலும் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை பறக்கும் வழித்திட்டமும் மாற்று வழி குறித்து ஆய்வு முடிந்து விரைவில் பணிகள் மேற்கெள்ளப்பட உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*