Home » Flash News » ரத யாத்திரைக்கு தடை

ரத யாத்திரைக்கு தடை

நெல்லை, மார்ச் 22: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, ராமராஜ்ஜியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்று வரும் ரத யாத்திரைக்கு நெல்லையில் இன்று அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த ரத யாத்திரை 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் புளியங்கரை கிராமத்திற்குள் நுழைந்த போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ரத யாத்திரையை எதிர்த்து பல்வேறு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தி கைதானார்கள். 144தடை விதித்தது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பட்டது.

இந்தநிலையில் ரதயாத்திரை இன்று நெல்லை மாவட்டம் அரியகுளம் வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது. அங்கிருந்து நெல்லை நகருக்குள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. மேலும் ரதத்திற்கு முன்னும் பின்னும் மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து சென்ற சுமார் 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*