Home » Flash News » குரங்கணி தீ விபத்து: பலி 18-ஆக உயர்வு

குரங்கணி தீ விபத்து: பலி 18-ஆக உயர்வு

சென்னை, மார்ச் 22 :குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம், குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ந்தேதி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்டனர். இதில் பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டனர். இதுவரை இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயஸ்ரீ இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 50 சதவீதம் காயங்களுடன்
சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 18 ஆக உயர்ந்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*