Home » Flash News » நாடாளுமன்றத்தில் கடும் அமளி

நாடாளுமன்றத்தில் கடும் அமளி

புதுடெல்லி, மார்ச் 19:நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.

மாநிலங்களவை கூடியதும் அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை காலையில் தொடங்கியதும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கி முறைகேடுகள் குறித்து பிரதமர் பதிலளிக்கவேண்டும் என வலியுறுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது. பஞ்சாப் வங்கி மோசடி பிரச்சனையால் மாநிலங்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.2018-19ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நிறைவுற்று, 2-ஆவது அமர்வு கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

ஆனால், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்ந்து முடங்கியுள்ளன.

மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதால் அவை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் சார்பில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று எடுத்துக்கொள்ளப் படும் என்று எதிர்பார்த்த நிலையில் உறுப்பினர்களின் கடும் அமளியால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று எடுத்துக்கொள்ளப்ப டவில்லை.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் ஆதரவு இல்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசுக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள சிவசேனா, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் சிவசேனா கட்சி ஒதுங்கியிருக்கும் என்று தெரிவித்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*