Home » Flash News » தள்ளிப்போகும் ரஜினியின் ‘காலா’:

தள்ளிப்போகும் ரஜினியின் ‘காலா’:

சென்னை, மார்ச் 19:தியேட்டர்களில் படங்களை திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி கடந்த 1-ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்து போராட்டம் நடத்தி வருகிறது.

இதனால் சினிமா படப்பிடிப்புகளும், டப்பிங் எடிட்டிங் உள்ளிட்ட பணிகளும் அடியோடு முடங்கி உள்ளன.புதிய படங்கள் வெளியாகாததால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் குறைந்தது. இதனால் பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பழைய படங்களே மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வந்தன. இதனிடையே கேளிக்கை வரி உயர்வை கண்டித்து தியேட்டர் அதிபர்களும் கடந்த 16-ம் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை தவிர தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்கங்களும் மூடப்பட்டு உள்ளது.

புதிய படங்களை தணிக்கை செய்வதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடையில்லா சான்று அளிக்க மறுப்பதால் படம் பார்ப்பதை தணிக்கை குழுவினர் நிறுத்தி உள்ளனர். ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு இம்மாதம் திரைக்கு வர தயாராக இருந்த 20 படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ம் தேதிக்குள் இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்பட்டவுடன் ஏற்கனவே ரிலீசுக்கு அறிவிக்கப்பட்ட படங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என விஷால் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனையால் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா பாடம் அறிவித்த தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காலா படத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் தடையில்லா சான்று கொடுக்காததால் தணிக்கை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் முடிந்த பிறகே இந்த படத்தை தணிக்கை செய்ய முடியும். எனவே காலா ஏப்ரல் 27-ல் இருந்து மே மாதம் தள்ளிப்போகும் என தெரிகிறது. அதேபோல் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 14-ம் தேதி தொடங்க இருந்தது. திரைத்துறை போராட்டம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பும் முடங்கி உள்ளது. இதேபோல் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்றோரின் படங்களின் படப்பிடிப்பும் ரத்தாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

போராட்டம் காரணமாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ் தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*