Home » Flash News » 6-வது முறையாக புதின் அதிபராக தேர்வு

6-வது முறையாக புதின் அதிபராக தேர்வு

சோபியா, மார்ச் 19:ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இரட்டை கோபுர தாக்குதலை முன்கூட்டியே கணித்த பல்கேரிய நாட்டை சேர்ந்த பாபா வங்கா விளாடிமிர் புதின் உலகை ஆள்வார் என்று கணித்ததாக கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட அவருக்கு எதிர்ப்பு இருந்தாலும், புதினே மீண்டும் அதிபராவார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன. புதினை எதிர்த்து 7 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

வாக்குச்சீட்டு முறையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.ஓட்டுகள் உடனே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 76 சதவீத ஓட்டுகள் பெற்று புதின் அபார வெற்றி பெற்றார்.இதன் மூலம் ரஷ்ய அதிபராக அடுத்த 6 ஆண்டுகள் இப்பதவியில் அவர்
நீடிப்பார்.

தேர்தலில் முறைகேடுகள் நடைந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், தேர்தல் வெற்றி தனது சாதனைகளுக்கான அங்கீகாரம் என புதின் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உலகை ஆள்வார் என்று பல்கேரியாவில் வாழ்ந்த பாபா வங்கா கணித்ததாக கூறப்படுகிறது. பல்கேரியாவில் ஸ்ட்ருமிக்கா கிராமத்தை சேர்ந்தவர் வங்கிலியா பண்டேவா. இவர் சிறு வயதாக இருந்த போது புயலில் சிக்கி பார்வையை இழந்தார். அவர் கணித்து கூறுவது பலவும் நடந்துள்ளதால் உலக புகழ் அடைந்தார். பாபா வங்கா என்று கூறப்படும் இவர் செப்டம்பர் 11ல் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது குறித்து முன்னரே கணித்து கூறியவர். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரிவு குறித்தும் அவர் கணித்திருந்தார்.

அதே போல 2016ல் ஜூன் மாதம் 23ந்தேதி பிரிட்டன் பிரிந்தது. இதே போல 1000க்கணக்கில் இவரது கணிப்புகள் நடந்துள்ளன. மூன்றாம் உலக போர் குறித்தும் கூட இவர் கணித்திருந்தார். பாபா வங்கா 1996ல் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் புதின் தான் இந்த உலகத்தை ஆளபோகிறார் என்று கணித்ததாக பர்மிங்கம் மெயில் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா தான் உலகிலேயே மிக பெரிய சக்தியாக திகழும் என்றும் அவர் தெரிவித்தாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*