Home » இந்தியா » பிரபல பாடகர் மகன் கைது

பிரபல பாடகர் மகன் கைது

மும்பை, மார்ச் 13:  பிரபல பாடகர் உதித் நாராயணனின் மகன் ஆதித்ய நாராயணனை வேகமாக கார் ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியதற்காக போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த உதித் நாராயணன் ஹிந்தி, தமிழ் உட்பட ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். இவரது மகன் ஆதித்ய நாராயணன் தனது மெர்சிடஸ் பென்ஸ் காரை ஓட்டிச்சென்றபோது ஒரு ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். மும்பை லோகந்த்வாலா பேக் ரோடு பகுதியில் நேரிட்ட இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனரும், பெண் பயணி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், அதி வேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக ஆதித்யநாராயணனை போலீசார் கைது செய்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*