Home » குற்றம் » நகைக்கடையில் ஐடி அதிகாரிகள் சோதனை

நகைக்கடையில் ஐடி அதிகாரிகள் சோதனை

சென்னை, மார்ச் 13: சென்னை சூளைமேட்டில் உள்ள அசோக் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள்
சோதனை நடத்தினர்.

சென்னை சூளைமேடு நெடுஞ்சாலையில் அசோக் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை உள்ளது. இந்த நிறுவனத்திற்கு
சௌகார்பேட்டையிலும் கிளை உள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகார் வந்தது.

அதன் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சூளைமேட்டில் உள்ள கடையில் நேற்று மாலை சோதனை நடத்தினர்.
நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*