Home » சினிமா » ஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன்

ஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன்

சில மாதங்களுக்கு முன் வெளியான ‘அட்டு’ படம் பரவலான கவனம் பெற்றது. இத் திரைப்படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா தற்போது 2-வது படத்தை தொடங்கி விட்டார். ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கும் ’டைசன்‘ என்கிற படத்தை இயக்குகிறார்.  பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகிறது.

பில்லாபாண்டி, வேட்டைநாய் போன்ற பல படங்களில் நாயகனாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ், இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் இதில் நடிக்கிறார். மேலும் அஃகு படத்தின் நாயகன் அஜய் இதில் 2 வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும். இப்படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பில் சுரேஷ் தயாரிக்கிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*