Home » தமிழ்நாடு » பள்ளத்தில் விழுந்ததால் உயிர் பிழைத்தோம்

பள்ளத்தில் விழுந்ததால் உயிர் பிழைத்தோம்

சென்னை, மார்ச் 13: தேனி தீவிபத்தில் மீட்கப்பட்ட பெண்கள் சென்னை திரும்பினர். கண் இமைக்கும் நிமிடநேரத்தில் காட்டுதீ சூழ்ந்தது என்று ஐடி ஊழியர் விஜயலட்சுமி கூறினார்.

தேனி குரங்கணி பகுதியில் ஏற்பட்ட காட்டுதீயில் இருந்து தப்பிய சென்னை முடிச்சூர் வரதராஜபுரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த ஐடி ஊழியர் மென் பொறியாளர் விஜயலட்சுமி, குரோம்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி சஹானா காரில் சென்னை திரும்பினர்.

வீடு திரும்பிய விஜயலட்சுமி செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில்: குரங்கணி வன பகுதியில் மதிய உணவு சாப்பிட மலையில் இருந்து இறங்கியபோது கண் இமைக்கும் நிமிட நேரத்தில் காட்டுதீ சூழ்ந்ததாகவும் இதில் இருந்து தப்பிக்க நாலாபுறமும் ஓடியபோதுஅங்கேயும் தீ சூழ்ந்ததால் பள்ளத்தில் விழுந்துஉயிர் தப்பியதாகவும் தெரிவித்தார்.

தங்களை மலையேற அழைத்து சென்றவர்கள் பயிற்சி பெற்றவர்கள் என்றும் விபத்து ஏற்படும் என யாரும் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.அவரது தந்தை ரவி கூறுகையில், மகளை மீட்டு வந்தாலும் மகள் போன்ற பலர் உயிரிழந்தது தமக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியதாகவும் சோகத்துடன் தான் மகளை தேனியில் இருந்து அழைத்து வந்தேன் என்றும் அவர் கூறினார்.

அப்பல்லோவில் மற்றொரு பெண்:
குரங்கணி காட்டு தீயில் சிக்கி படுகாயத்துடன் மீட்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த இலக்கியா (வயது 27) மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டுவரப்பட்டார். வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*