Home » குற்றம் » புதுப்பெண்ணுக்கு காத்திருந்த சோகம்

புதுப்பெண்ணுக்கு காத்திருந்த சோகம்

சென்னை, மார்ச் 13: குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 7 பேர் பெண்கள். 3 பேர் ஆண்கள். பலியான சென்னையைச் சேர்ந்த புனிதாவிற்கு திருமணமாகி 2 மாதங்கள் தான் ஆகிறது. உயிரிழந்த 8 பேரின் உடல்கள் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு கொண்டு
செல்லப்பட்டு உள்ளன.

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த அருண் பிரபாகரன், வேளச்சேரியைச் சேர்ந்த நிஷா ஆகியோரது உடல்கள் சென்னை கொண்டுவரப்பட்டு உள்ளன. மற்றும் கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச்சேர்ந்த பெண் பொறியாளர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பொறியாளர் சுபாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து இருந்தனர். இந்த நிலையில் இவர் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்து இருப்பது பெற்றோ ருக்கு மிகுந்த மன வேதனையை தந்துள்ளது.

உயிரிழந்த பூந்தமல்லியைச் சேர்ந்த அருண் பிரபாகரன் (வயது 28), வேளச்சேரியைச் சேர்ந்த நிஷா (வயது 30), கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த புனிதா (வயது 25) ஆகியோரது இல்லங்களில் நேற்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குவிந்திருந்தனர். பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றினர்.

இவர்களில் செங்கல்பட்டைச் சேர்ந்த புனிதா வேளச்சேரியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஜனவரி 28-ந் தேதி தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. மலையேறு வதில் இவருக்கு மிகுந்த ஆர்வம் என்பதால் கணவர் பாலாஜியின் துணை இன்றியே சென்றுள்ளார். இயற்கையை ரசிப்பதிலும், சுற்றுப் பயணங்கள் செல்வதிலும் இவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.
திருமணமான புதிதில் மலையேற செல்லவேண்டாம் என்று பெற்றோர் இவருக்கு ஆலோசனை கூறியதை பொருட்படுத்தாமல் சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார்.

அருண்பிரபாகரன் என்பவர் சென்னை யில் உள்ள டிரக்கிங் கிளப் மேலாளராக உள்ளார். விளையாட்டுகளில் ஆர்வம் மிக்க இவர் சென்னை துறைமுகத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரது நண்பர் விஜயகுமார் என்பவர் கூறு கையில், பலமுறை மலையேறும் பயிற்சிக்கான ஏற்பாடுகளை அருண் பிரபாகரன் செய்திருக்கிறார். ஒவ் வொரு முறையும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*